கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக அரியலூர் மாவட்டம் காந்தி மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி சந்தை, அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக வந்த காரணத்தினால் சமூக விலகளை கடைபிடிக்க வேண்டிஅரியலூர் பேருந்து நிலையம், காமராஜர் திடல் ஆகிய இடங்களிலும் காய்கறி சந்தையில் திறக்கப்பட்டன.
இருந்தபோதிலும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்த காரணத்தினால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உழவர் சந்தையில் காய்கறி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செயல்பாட்டிற்கு வங்துள்ளது.
மேலும் உழவர் சந்தையில் அனைத்து கடைகளையும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.