கரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அய்யூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேரந்த ராஜா என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டுள்ளதாக ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் ஜெகதீசனுக்கு தகவல் வந்தது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ராஜா என்பவரின் வீட்டை சோதனை செய்ததில் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போடப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார் ஊறல் போடப்பட்ட 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். அதற்கு பயன்படுத்திய பொருள்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: