அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 178 பள்ளிகளிலிருந்து 10,535 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். குறிப்பாக காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதிக மதிப்பெண் எவ்வாறு எடுப்பது, தேர்வு குறித்த பயத்தைப் போக்குவதற்காக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர், கல்வி அலுவலர்கள், அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். இதில் மாவட்டத்தின் பல்வேறுப் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இதனையடுத்து,மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:
சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை