ETV Bharat / sports

விதிமுறை மீறல்... வினேஷ் போகத் தற்காலிக நீக்கம்! - இந்திய மல்யுத்த கூட்டமைப்பு

ஒலிம்பிக்சில் விதிமுறைகளை மீறிய புகாரில்,இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Vinesh Phogat
வினேஷ் போகத்
author img

By

Published : Aug 11, 2021, 6:11 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் விதிமுறைகளை பின்பற்றாத இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவர் மீது மூன்று புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  • ஒலிம்பிக் கிராமத்தில் மற்ற இந்திய வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட ஒத்துழைக்கவில்லை
  • இந்திய அணியின் அலுவல்பூர்வ ஸ்பான்சரான ஷிவ் நரேஷின் ஜெர்சி ஆடையை அணிய மறுத்து, நைக் லோகோ இடம்பெற்ற ஆடையை அணிந்தார்.
  • இந்திய வீராங்கனைகள் சோனம், அன்ஷு மாலிக், சீமா பிஸ்லா ஆகியோர் தங்கிய அறைகளுக்கு அடுத்த அறையில் தங்கிட மறுப்பு தெரிவித்தது.

மேலே குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதிவரை வினேஷ் போகத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 53 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வினேஷ் போகத், காலிறுதி போட்டியில் தோல்வியுற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், " ஹங்கேரியில் பயிற்சி பெற்ற வீராங்கனை என்பதால், தன்னை இந்திய வீராங்கனையாக நினைத்துக் கொள்ளாமல் வெளிநாட்டு வீரரைப் போல வினேஷ் நடந்துகொண்டார்.

டோக்கியோவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகள் நேரில் வந்து வாங்கிச் செல்ல வேண்டும்.

ஆனால், அப்படி செய்யாமல் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அலுவலரை அந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளச் சோனம் அனுப்பியிருந்தார். இத்தகைய நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதியதால் அவருக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது" என தெரிவித்தார்.

இதேபோல, 19 வயது இந்திய மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக், அலுவல் நடத்தையை சரியாக பின்பற்றவில்லை எனக் கூறி அவரிடம் விளக்கம் கேட்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிஎஸ்ஜியில் மெஸ்ஸி; என்ன அக்ரிமென்ட்... எவ்வளவு செட்டில்மென்ட்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.