டோக்கியோ: மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 போட்டிகள் இன்று (ஆக. 27) நடைபெற்றன. இதில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல், பிரேசில் வீராங்கனை ஜாய்ஸ் டி ஒலிவீரா உடன் மோதினார்.
போட்டுத்தாக்கிய பவினாபென்
ஆட்டத்தின் தொடக்கத்தில் ஒலிவீரா புள்ளிகளை பெற்று ஆதிக்கம் செலுத்தினார். அதன்பின், சுதாரித்துக் கொண்ட பவினாபென், ஆக்ரோஷமாக விளையாடி முதல் செட்டை 12-10 என்ற கணக்கில் வென்றார்.
இதையடுத்து, இரண்டாவது, மூன்றாவது செட்டுகளை முறையே 13-11, 11-6 என்ற கணக்கில் வென்று, பவினாபென் பிரேசில் வீராங்கனையை தோற்கடித்தார். இதன்மூலம், பவினாபென் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
-
Highlights @EurosportIN: #ParaTableTennis Player @BhavinaPatel6 on entering the quarter-finals of #Tokyo2020 #Paralympics Games #Praise4Para #Cheer4India #Eurosport@ianuragthakur @IndiaSports @Media_SAI @ddsportschannel @TheLICForever @MyIndianBank @VedantaLimited pic.twitter.com/MhuWjsltfT
— Paralympic India 🇮🇳 #Cheer4India 🏅 #Praise4Para (@ParalympicIndia) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Highlights @EurosportIN: #ParaTableTennis Player @BhavinaPatel6 on entering the quarter-finals of #Tokyo2020 #Paralympics Games #Praise4Para #Cheer4India #Eurosport@ianuragthakur @IndiaSports @Media_SAI @ddsportschannel @TheLICForever @MyIndianBank @VedantaLimited pic.twitter.com/MhuWjsltfT
— Paralympic India 🇮🇳 #Cheer4India 🏅 #Praise4Para (@ParalympicIndia) August 27, 2021Highlights @EurosportIN: #ParaTableTennis Player @BhavinaPatel6 on entering the quarter-finals of #Tokyo2020 #Paralympics Games #Praise4Para #Cheer4India #Eurosport@ianuragthakur @IndiaSports @Media_SAI @ddsportschannel @TheLICForever @MyIndianBank @VedantaLimited pic.twitter.com/MhuWjsltfT
— Paralympic India 🇮🇳 #Cheer4India 🏅 #Praise4Para (@ParalympicIndia) August 27, 2021
பாரா டேபிள் டென்னிஸில் இந்தியா
முன்னதாக, குரூப் பிரிவின் முதல் போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்து, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வீராங்கனையிடம் வெற்றி பெற்ற பவினாபென், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
டேபிள் டென்னிஸ் சி-3 பிரிவில் இடம்பெற்றிருந்த மற்றொரு இந்திய வீராங்கனை சோனல்பென் படேல், குரூப் பிரிவின் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்மர் ஒலிம்பிக்
டோக்கியோவில், 2020 கோடைக்கால ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று ஏழு பதக்கங்களை வென்றனர். நீரஜ் சோப்ரா தடகளப் பிரிவான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சிறப்பித்தார்.
இதையும் படிங்க: ஒடிசா முன்னுதாரணம்: மல்யுத்தத்திற்கு ஸ்பான்சராகும் உத்தரப் பிரதேசம்!