டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (ஆக.6) நடைபெற்றன.
இதன் ஒரு போட்டியில், இந்திய வீரர் பஜ்ரங் புனியா, மூன்று முறை உலக சாம்பியனான அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்த ஹாஜி அலியேவ் உடன் மோதினார்.
போராட்டமும் தோல்வியும்
ஆட்டத்தின் தொடக்கத்தில் பஜ்ரங் புனியா தனது முதல் புள்ளியைப் பெற்ற நிலையில், அலியேவ் அடுத்தடுத்து புனியாவை மடக்கிப் பிடித்து புள்ளிகளைப் பெறத் தொடங்கினார்.
இறுதிநேரத்தில் பஜ்ரங் புனியா மல்லுக்கட்ட முயன்றாலும், அவரால் வீழ்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இதனால், பஜ்ரங் புனியா 5-12 என்ற புள்ளிக்கணக்கில் அலியேவிடம் வீழ்ந்தார்.
பஜ்ரங் பயணம்...
முன்னதாக, பஜரங் புனியா இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 8 சுற்றில் கிரிகிஸ்தான் வீரரையும், காலிறுதிச் சுற்றில் ஈரான் வீரரையும் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். இதையடுத்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பஜ்ரங் புனியா பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோற்றது ஹாக்கி அணி அல்ல இந்தியா எனும் நாடு - வெல்டன் வந்தனா