ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி: சஜன் பிரகாஷ் ஏமாற்றம் - டோக்கியோ ஒலிம்பிக்

இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறினார்.

சஜன் பிரகாஷ், Sajan Prakash
Tokyo Olympics: Swimmer Sajan Prakash fails to reach semifinal
author img

By

Published : Jul 26, 2021, 7:17 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஆண்கள் 200 மீட்டர் நீச்சல் பட்டர்ஃபிளை பிரிவிற்கான போட்டிகள் இன்று (ஜூலை 26) நடைபெற்றது.

இதில் ஹீட் 2 போட்டியில், இந்தியா சார்பில் சஜன் பிரகாஷ் பங்கேற்றார். அப்போட்டியில் 200 மீட்டர் இலக்கை 1:57.22 வினாடிகளில் கடந்து, அவர் ஒட்டுமொத்தமாக 24ஆவது இடத்தை பிடித்தார். முதல் 16 இடங்களுக்குள் அவர் வந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்த சுற்றோடு வெளியேறி ஏமாற்றளித்தார்.

நேற்று (ஜூலை 25) நடைபெற்ற பெண்கள் 100 மீட்டர் நீச்சல் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் மானா பட்டேல், ஆண்கள் 100 மீட்டர் நீச்சல் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹரி நடராஜ் ஆகியோர் தோல்வியுற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாடு திரும்பிய டோக்கியோ நாயகி... அரசு கௌரவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.