டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் 20கி.மீ நடை பந்தயம் போட்டி இன்று (ஆக. 5) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா சார்பில் சந்தீப் குமார், ராகுல் ரோஹிலா, இர்பான் கோலோதும் தோடி ஆகியோர் உள்பட மொத்தம் 57 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 52 வீரர்கள் இலக்கை கடந்தனர்.
20கி.மீ தூரத்தை 1:20:16 நேரத்தில் கடந்து தேசிய சாதனையை வைத்துள்ள சந்தீப் குமார், இன்றைய போட்டியில் 1:25:07 நிமிடத்தில் கடந்து 23ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இர்பான் 1:32:06 நிமிடத்தில் கடந்து 47ஆவது இடத்தையும், ராகுல் 1:34:41 நிமிடத்தில் கடந்து 51ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த பந்தயத்தில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த மாசிமா ஸ்டானோ 1:21:05 நேரத்தில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை பெற்றார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்தும்... துரத்தும் சாதிய வன்மம்