ETV Bharat / sports

அனல் பறந்த மல்யுத்தக் களம்... மேலும் ஒரு அசத்தல் வெற்றி... அரையிறுதிக்குள் ரவி குமார் தாஹியா!

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரரான பல்கேரிய நாட்டைச் சேர்ந்த வங்கேலோவை வீழ்த்தி, ரவி குமார் தாஹியா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ரவி குமார் தாஹியா
ரவி குமார் தாஹியா
author img

By

Published : Aug 4, 2021, 10:08 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்: ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்தப் பிரிவில் விளையாடி வருபவரும், இரு முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவருமான ரவி குமார் தாஹியா, புயல் வேகத்தில் அரையிறுதிக்குச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரரான பல்கேரிய நாட்டைச் சேர்ந்த வங்கேலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி தாஹியா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ரவி குமார் தாஹியா
ரவி குமார் தாஹியா

இன்றைய தினம் முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியாவின் எடர்டோ டைகரெரோஸை வீழ்த்தி தாஹியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை தாஹியா பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஆசிய சாம்பியனான தாஹியா டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதிக்கு முன்னேறிய ரவி குமார் தாஹியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.