கடந்தாண்டு நடக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்தாண்டு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி இன்று மாலை லேசர் ட்ரோன் ஷோ, வாண வேடிக்கைகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவின் முக்கிய அம்சமாக 204 நாடுகளின் அணியினரும் தங்களது தேசியக்கொடியுடன் அணிவகுத்துச் சென்றனர். கரோனா காரணமாக, தொடக்க விழாவில் இந்தியா சார்பில் 19 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றனர்.
அதில், இந்திய அணிக்குத் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஐந்து முறை உலகச் சாம்பியன் மேரி கோம், ஹாக்கி ஆண்கள் அணி கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோர் ஏந்திச்சென்றனர்.
தொடக்க விழாவில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் அங்கிதா ரெய்னா சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் டேபிள் டென்னிஸ் அணியைச் சேர்ந்த மாணிக்க பத்ரா, ஷரத் கமல் ஆகியோர் விழாவில் கலந்துகொள்ளவில்லை. அமித், ஆஷிஷ் குமார், மேரி கோம் உள்ளிட்ட எட்டு குத்துச்சண்டை வீரர்களுடன், ஆறு இந்திய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
-
#Cheer4India! #Tokyo2020 https://t.co/whQNSi2l7z
— Narendra Modi (@narendramodi) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Cheer4India! #Tokyo2020 https://t.co/whQNSi2l7z
— Narendra Modi (@narendramodi) July 23, 2021#Cheer4India! #Tokyo2020 https://t.co/whQNSi2l7z
— Narendra Modi (@narendramodi) July 23, 2021
தேசியக்கொடியுடன் இந்திய அணி அணிவகுப்பு நடத்தும் காணொலியை பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!