டோக்கியோ ஒலிம்பிக்கில் ஐந்தாவது நாள் போட்டிகள் இன்று (ஜூலை 27) காலை தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் மூன்றாவது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய சரத் கமல், மூன்றாவது சுற்றில் சீனாவின் மா லாங்கை எதிர் கொண்டார். முதல் செட் ஆட்டத்தை 7-11 என்ற புள்ளிகளை பெற்று மா லாங் ஆட்டத்தை ஆரம்பித்தார்.
நம்பிக்கையை தளரவிடாமல் ஆடிய சரத் கமல் அடுத்த செட்டை 11- 8 என்ற புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தின் போக்கை தன் பக்கம் மாற்ற நினைத்தார். ஆனால் அடுத்தடுத்த ஆட்டங்களை 13- 11, 11- 4, 11- 4 என்ற புள்ளிகளில் மா லாங் சரத் கமலை வீழ்த்தி வென்றார்.
46 நிமிடம் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4- 1 என்ற செட் கணக்கில் வென்று மா லாங் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் ஹாக்கி- ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா