ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 5ஆம் நாள்: பதக்கம் வெல்லுமா இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி - தீபக் குமார்

ஒலிம்பிக் தொடரின் ஐந்தாம் நாளான நாளை (ஜூலை 27) இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள் குறித்த தொகுப்பு.

டோக்கியோ ஒலிம்பிக் 5ஆம் நாள்
டோக்கியோ ஒலிம்பிக் 5ஆம் நாள்
author img

By

Published : Jul 26, 2021, 11:00 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஐந்தாவது நாளான நாளை (ஜூலை 27) இந்திய துப்பாக்கிச் சுடுதல் கலப்பு அணியினர் பதக்க வேட்டை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றையர் பிரிவில் கைவிட்டுப்போன பதக்கத்தை மனு பாக்கர் கலப்பு பிரிவில் கைப்பற்ற துடித்துக்கொண்டிருப்பார்.

இதை தவிர்த்து, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, டேபிள் டென்னிஸ் சரத் கமல், பேட்மிண்டனில் இரட்டையர் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் பங்கேற்கும் போட்டிகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

ஒலிம்பிக்கில் குரூப் 'ஏ'-வில் இந்தியா இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்தை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இதனால் நாளை நடைபெறும் ஸ்பெயின் அணியுடனான போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சரத் கமல் - டேபிள் டென்னிஸ்

இந்தியா சார்பாக டேபிள் டென்னிஸில், நீண்ட அனுபவம் வாய்ந்த சரத் கமல் நாளை உலக தரவரிசையில் மூன்றாம் நிலை வீரரான சீனாவின் லாங் மா உடன் மோதவுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா சார்பாக முதன்முதலாக காலிறுதியில் பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் வீரர் என்ற பெருமையை பெறுவார் சரத் கமல்.

துப்பாக்கிச் சுடுதல்

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா அதிக பதக்கங்களை பெறும் என்று கூறப்பட்ட நிலையில், ஒற்றையர் பிரிவில் ஒரு பதக்கத்தைக்கூட பெறவில்லை. இந்நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் மனு பாக்கர், சௌரப் சௌத்ரி, யஷஸ்வினி சிங் தேஸ்வால், அபிஷேக் வர்மா ஆகியோர் பதக்கத்திற்கான சுற்று வரை முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபால், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவில் இளவேனில் வாலறிவன், திவ்யான்ஷ் சிங் பன்வார், அஞ்சும் மௌட்கில், தீபக் குமார் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி - பேட்மிண்டன்

பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை, மூன்றாம் நிலையில் இருக்கும் சீனா இணையை முதல் போட்டியிலேயே வீழ்த்தியது.

இருப்பினும், இரண்டாவது போட்டியில் இந்தோனேசியா அணியிடம் தோல்வியடைந்து சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், இங்கிலாந்து இணையர்களான பென் லேன், ஷான் வெண்டி இணையுடனான நாளைய போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 5ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.