டோக்கியோ ஒலிம்பிக்கில் மூன்றாவது நாள் போட்டிகள் இன்று தொடங்கின. இதில் மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட மேரி கோம் டொமினிக்காவின் மிக்குவேலினாவை எதிர்கொண்டார்.
அபாரமாக விளையாடிய மேரி கோம் 4:1 என்ற செட் கணக்கில் மிக்குவேலினாவை வீழ்த்தினார். இதன் மூலம் மேரி கோம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஜோர்டானில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம், இந்த முறை தங்கம் வென்று அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Tokyo Olympics: பி வி சிந்து அபார வெற்றி