டோக்கியோ: இந்தியாவின் முக்கிய போட்டிகளான மகளிர் ஹாக்கி அணி மோதும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி, தமிழ்நாடு வீரர்களான நாகநாதன் பாண்டி, ஆரோக்கிய ராஜிவ் பங்கேற்கும் 4X400 தொடர் ஓட்டப்பந்தயம் ஆகியவை ஒலிம்பிக் தொடரின் 15ஆவது நாளான ஆக.6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
பஜ்ரங் புனியா - மல்யுத்தம்
மல்யுத்தத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான பஜ்ரங் புனியா நாளை கிர்கிஸ்தான் நாட்டின் அக்மதாலீவ்-ஐ சந்திக்க இருக்கிறார்.
முழங்கால் காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள பஜ்ரங் புனியா, மூன்று முறை உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி
ஒலிம்பிக்கில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி, அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியல், 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.
ஆடவர் 4x400 தொடர் ஓட்டப் பந்தய இந்திய அணி
அமோஜ் ஜேக்கப், நாகநாதன் பாண்டி, ஆரோக்கிய ராஜிவ், நிர்மா நோவா டாம், முகமது அனஸ் ஆகியோர் வெள்ளிக்கிழமை நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்கின்றனர்.