ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: 35 போட்டியாளர்கள் உள்பட 90 பேருக்கு கரோனா - ஒலிம்பிக் கரோனா

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபெறும் போட்டியாளர்கள் 35 பேர் உள்பட மொத்தம் 90 நபர்களுக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக்
author img

By

Published : Aug 2, 2021, 11:16 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்கின் 11ஆவது நாள் போட்டிகள் இன்று (ஆக.02) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் போட்டியாளர்கள் 35 பேர் உள்பட மொத்தம் 90 நபர்களுக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்

இது குறித்து, ”டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஒலிம்பிக் கிராமத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 815 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விளையாட்டு வீரர்களை கருத்தில் கொண்டு 41 ஆயிரத்து 458 நபர்களுக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் விளையாட்டு வீரர்கள் 35 நபர்கள் உள்பட மொத்தம் 90 நபர்களுக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமை செயல் அலுவலர் டொஷிரோ மியுட்டோ, தாங்கள் தினசரி 30 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் வீதம் மேற்கொண்டு வருவதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து தனிமைப்படுத்தி வைரஸ் பரவாமல் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 11ஆவது நாள் அட்டவணை: இந்தியாவின் போட்டிகள் எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.