ETV Bharat / sports

தேசிய நாயகன் நீரஜ் சோப்ரா- மு.க. ஸ்டாலின் புகழாரம்! - ஈட்டி எறிதல்

ஒலிம்பிக் தடகளத்தில் நாட்டின் 120 ஆண்டுகள் காத்திருப்பை தங்க பதக்கம் மூலம் நிறைவு செய்த நீரஜ் சோப்ராவுக்கு மனதார பாராட்டு தெரிவித்துள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை தேசிய நாயகன் எனவும் வர்ணித்துள்ளார்.

Stalin wishes Neeraj Chopra
Stalin wishes Neeraj Chopra
author img

By

Published : Aug 7, 2021, 6:47 PM IST

சென்னை : டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நாட்டுக்கு தங்க பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதயம் கனிந்த வாழ்ந்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “இந்தியாவின் விளையாட்டுக்கு இன்று ஒரு மறக்கமுடியாத நாள். ஒலிம்பிக் தடகளத்தில் நாட்டின் 120 ஆண்டுகால காத்திருப்பை தங்கம் வென்று முடிவுக்குகொண்டுவந்த நீரஜ் சோப்ராவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நீங்கள் 100 கோடி இந்தியர்களின் நெஞ்சில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் ஒரு உண்மையான தேசிய நாயகன்” எனத் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தடகள பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.

இதன் மூலம் இந்தியாவின் நூற்றாண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : ஈட்டி தூக்கி நின்னான் பாரு.. இவன வெல்ல யாரு.... சரித்திர நாயகன் நீரஜ் சோப்ரா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.