டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலம் வென்றிருந்தார். இந்நிலையில், டோக்கியோவில் இருந்து டெல்லி திரும்பிய அவருக்கும், அவரது பயிற்சியாளர் பார்க் டே-டாங்கேவுக்கும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் நன்றி
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்த பி.வி.சிந்து கூறுகையில், "நான் மிக மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர்கிறேன்.
எனக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்த பேட்மிண்டன் சங்கத்தின் உள்பட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது தாய், தந்தையைக் காண செல்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்" என்று தெரிவித்தார்.
ரியோ, டோக்கியோ எனத் தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண், இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.