டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிஃள் எஸ்ஹெச் 1 பிரிவில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா பங்கேற்றார்.
இப்போட்டியில், 249.6 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து, இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதுவே, ஒலிம்பிக் வரலாற்றில் பெண் ஒருவர் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் பெற்ற 249.6 புள்ளிகள் மூலம் உலக சாதனையை அவனி லெகாரா சமன்செய்துள்ளார்.
முன்னதாக, பாரா ஒலிம்பிக்கில் நேற்று (ஆகஸ்ட் 29) இந்தியா சார்பில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், வட்டு எறிதல் (எஃப்-52 பிரிவு) வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.
இதையும் படிங்க: PARALYMPICS: வெள்ளி வென்றார் யோகேஷ் கத்துனியா; இந்தியாவுக்கு 5ஆவது பதக்கம்