டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் தொடரின் நான்காம் நாளான இன்று வரை இந்தியா ஒரு வெள்ளி பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது.
வந்தார் மீராபாய்
இந்நிலையில், பளு தூக்குதல் 49 கிலோ எடை பிரிவில் பங்கேற்று இந்தியாவுக்கு வெள்ளி பதக்கத்தை பெற்றுக்கொடுத்த மீராபாய் இன்று நாடு திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, அதே போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை தற்போது ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பது, மீராபாய்க்கு தங்கப்பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
காவலர் பதவி
மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் மீராபாய்க்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருந்த நிலையில், அவருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவியையும் அளிப்பதாக தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீராபாய் சானு: 2016 தோல்வி முதல் 2021 வெள்ளிவரை - 'நெவர் எவர் கிவ் அப்' கதை