ETV Bharat / sports

EXCLUSIVE: ஹாக்கியை ஊக்கப்படுத்துங்கள் - இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்

ஹாக்கி விளையாட்டைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என அனைவருக்கும் கோரிக்கை வைக்கிறேன் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை மோனிகா மாலிக் அளித்துள்ள பிரத்யேக காணொலி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்திய வீராங்கனை மோனிகா மாலிக், monika malik
இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்
author img

By

Published : Aug 2, 2021, 9:06 PM IST

Updated : Aug 2, 2021, 10:43 PM IST

சண்டிகர்: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய மகளிரணியின் இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது.

இந்த பெரும் வெற்றியை இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை மோனிகா மாலிக்கின் குடும்பத்தாரைப் பாராட்ட உள்ளூர்ப் பொதுமக்கள், அவரின் இல்லத்தின் முன்திரண்டு பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகிழ்ச்சியில் திளைக்கிறோம்

Monika malik, மோனிகா மாலிக்
மோனிகா மாலிக் சகோதரர் ஆஷிக் மாலிக்

இந்த வெற்றி குறித்து மோனிகாவின் மூத்த சகோதரர் ஆஷிக் மாலிக் கூறுகையில்,"ஒட்டுமொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறோம்.

எனது தங்கையின் சாதனை அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கப்பதக்கத்துடன் நாடு திரும்பும் என நம்புகிறோம்" என்றார்.

மல்யுத்தம் - ஹாக்கி

சண்டிகரைச் சேர்ந்த மோனிகா மாலிக், சிறுவயதில் இருந்தே ஹாக்கியில் நாட்டம் கொண்டு, நாட்டுக்கு பதக்கம் வென்றுத்தர வேண்டும் என்ற கனவோடு வளர்ந்தவர்.

அவர் கனவு நிறைவேற இன்னும் சில அடிகள் இருக்கிறது. மோனிகா மாலிக் கடந்த ரியோ ஒலிம்பிக் தொடரிலும் பங்கேற்றிருந்தார். தேசிய அணிக்கு விளையாடுவதற்கு முன், பள்ளிப்பருவத்தில் அவர் சண்டிகர் அணிக்காக விளையாடியுள்ளார்.

மோனிகாவின் தந்தை தக்தீர் சிங், மோனிகாவை மல்யுத்த வீராங்கனையாக கொண்டுவர வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், மோனிகாவிற்கு ஹாக்கிமேல் விருப்பம் என்பதால், அவரின் தந்தை மோனிகாவின் ஆசைக்கு இணங்கி ஹாக்கி மட்டையைக் கையில் கொடுத்து அனுப்பியுள்ளார்.

மனம் திறக்கும் மாலிக்

EXCLUSIVE: இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்

மோனிகா மாலிக் கடைசியாக வீட்டிற்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் அவர் பயிற்சிப் பெற்று வந்த காலங்களில், மாலிக் தன் தாயுடன் செல்ஃபோனில் காணொலி வாயிலாகப் பேசுவதுதான் வழக்கம்.

அதேபோல், அவருடைய குடும்பத்தார் உடன் இருக்கையில் மோனிகா மாலிக்கிடம் காணொலி மூலமாக 'ஈடிவி பாரத் ஊடகம்' இந்திய அணியின் வெற்றி குறித்தும், அவரின் உணர்ச்சி குறித்தும் கேட்டது.

அப்போது மனம் திறந்த மோனிகா மாலிக், "எங்கள் அணியில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால், அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டும் என்பதால், போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.

அரையிறுதியில் அர்ஜென்டினா?

குழுவாக விளையாண்டால் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியைக் கூட வெல்ல முடியும் என்பதை இன்றைய போட்டி எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.

அரையிறுதியில் அர்ஜென்டினா அணிக்கு எதிராகப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்தியா அணி ஒரு புதிய சாதனையை செய்யும் முனைப்பில் உள்ளோம்.

எனக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருக்கிறது. அனைவரும் ஹாக்கி விளையாட்டைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்" எனக்கூறினார்.

இதையும் படிங்க: நாட்டிற்காக பதக்கம் வென்றது மட்டற்ற மகிழ்ச்சி - சிந்துவின் தந்தை நெகிழ்ச்சி

Last Updated : Aug 2, 2021, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.