ETV Bharat / sports

PARALYMPICS: இந்தியாவுக்கு 5ஆவது தங்கம்; அசத்திய கிருஷ்ணா நாகர் - பாரா பேட்மிண்டன்

கிருஷ்ணா நாகர், krishna nagar
கிருஷ்ணா நாகர்
author img

By

Published : Sep 5, 2021, 9:51 AM IST

Updated : Sep 5, 2021, 11:03 AM IST

09:49 September 05

பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்ஹெச்-6 பிரிவில், இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் ஐந்தாவது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் (செப். 5) நிறைவடைகிறது. இதையடுத்து, ஆடவர் பேட்மிண்டன் எஸ்ஹெச்-6 பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில், ஹாங் காங் வீரர் மான் கை சூ உடன் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் மோதினார். போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய கிருஷ்ணா  21-17, 16-21, 21-17 என்ற செட் கணக்கில் ஹாங் காங் வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 

பேட்மிண்டனில் பதக்க மழை

பாரா பேட்மிண்டன் விளையாட்டு, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பேட்மிண்டன் போட்டிகளில் மட்டும் இந்தியா இதுவரை 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களைக் குவித்துள்ளது. 

இதன்மூலம், டோக்கியோ பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களைப் பெற்று 27ஆவது இடத்தில் இருந்து 24ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க: பதக்கத்தை குவிக்கும் இந்தியா; வெள்ளி வென்றார் சுஹாஸ் ஐஏஎஸ் 

Last Updated : Sep 5, 2021, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.