ஒலிம்பிக் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதிப் போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. அதில் 1-0 என வெற்றிப் பெற்று இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி கோலை அடித்த குர்ஜித் கவுர் வீட்டினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் லட்டுக்கள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தனது மகளின் கோல் காரணமாக ஒட்டுமொத்த தேசமே மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்த குர்ஜித்தின் பெற்றோர், அரையிறுதியில் தனது மகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசத்திற்கு புகழ் சேர்ப்பார் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு