ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக் பெல்ஜியத்தின் டேவிட் கோபினை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிக் முதல் செட் கணக்கை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கோபினிடமிருந்து கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்தும் தனது சிற்ப்பான ஆட்டத்தினால் ஜோகோவிக் இரண்டாவது செட்கணக்கையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி கோபினுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் நோவக் ஜோகோவிக் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் டேவிட் கோபினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நோவக் ஜோகோவிக் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் வைல்டு கார்டு எண்ட்ரீ மூலம் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இதன் மூலம் தனது 110ஆவது சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: #Japanopen: 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்' - அதிரடி காட்டிய ஜோகோவிச்!