டபிள்யூ.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவின் சென்ஷைன் நகரில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான அஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியை எதிர்த்து, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆஷ்லே பார்டி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட் கணக்கை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சியளித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி ஆஷ்லே இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி டபிள்யூ.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்த ஆஷ்லி பார்ட்டி...!