2019 விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தில் நடப்பெற்று வருகிறது. இதில் இரு முறை விம்பிள்டன் சாம்பியனான ஆண்டி முர்ரே, ஏழு முறை பெண்கள் விம்பிள்டன் சாம்பியனான செரினா வில்லியம்ஸுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறார்.
ஆண்டி முர்ரே இடுப்பு அறுவை சிகிச்சையின் காரணமாக இந்த ஆண்டு விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேர்க்கவில்லை.
முர்ரே ஒரு கலப்பு இரட்டையர் கூட்டாளரைத் தேடுவதாகவும், உலக நம்பர் 1 மற்றும் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ஆஷ்லீ பார்ட்டி ஆகியோரால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, முர்ரேயின் முகவரான மாட் ஜென்ட்ரி இந்த ஜோடியை உறுதிப்படுத்தினார்.
இந்த கலப்பு இரட்டையர் ஆட்டம் வரும் ஜூலை 4 ம் தேதி ஆல் இங்கிலாந்து கிளப்பில் நடக்கவிருக்கிறது.