சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பால் நடப்பு ஆண்டிற்கான கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடத்தப்பட்டது. இதில் நேற்று (மார்ச் 14) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜார்ஜியாவின் நிகோலோஸ் பசிலாஷ்விலி, ஸ்பெயினின் பாடிஸ்டா அகுட்டை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு வீரர்களும் சமபலத்துடன் மோதினர். இதனால் முதல் செட் ஆட்டமே டைபிரேக்கர் சுற்றுக்குச் சென்றது. இருப்பினும் தொடர்ந்து போராடிய பசிலாஷ்விலி 7-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தில் அதிரடியாக விளையடிய பசிலாஷ்விலி 6-2 என்ற கணக்கில் பாடிஸ்டா அகுட்டிற்கு அதிர்ச்சியளித்தார். இதன்மூலம் பசிலாஷ்விலி 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பாடிஸ்டா அகுட்டை வீழ்த்தி, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.
மேலும், கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் நிகோலோஸ் பசிலாஷ்விலி வெல்லும் நான்காவது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2ஆவது டி20: அறிமுக ஆட்டத்தில் அசத்திய கிஷான், அதிரடியில் மிரட்டிய கோலி; இந்தியா அபார வெற்றி!