2021 பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டம் நேற்று (மே 12) நடைபெற்றது. இதில், ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவுடன் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா மோதினார்.
இப்போட்டியில தரவரிசை பட்டியலில் 33ஆவது இடத்தில் உள்ள கிரெஜ்சிகோவா 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். கிரெஜ்சிகோவா வெல்லும் முதல் கிராண்ட ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
இரட்டையரிலும் பட்டம் வென்றார்
ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற அடுத்த நாளே, தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்தில் கிரெஜ்சிகோவா களம் கண்டார். மகளிர் இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்தில், பார்போரா கிரெஜ்சிகோவா மற்றும் கேட்ரீனா சினிகோவா இணை, இகா ஸ்வீடெக் மற்றும் பெத்தனி மாட்டேக் இணையை எதிர்கொண்டது.
இதில், கிரெஜ்சிகோவா மற்றும் சினிகோவா இணை 6-4,6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
-
🏆 Jump for Joy 🏆@K_Siniakova + @BKrejcikova #RolandGarros pic.twitter.com/r52bHa55Ko
— Roland-Garros (@rolandgarros) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🏆 Jump for Joy 🏆@K_Siniakova + @BKrejcikova #RolandGarros pic.twitter.com/r52bHa55Ko
— Roland-Garros (@rolandgarros) June 13, 2021🏆 Jump for Joy 🏆@K_Siniakova + @BKrejcikova #RolandGarros pic.twitter.com/r52bHa55Ko
— Roland-Garros (@rolandgarros) June 13, 2021
டபுல் சாம்பியன்ஷிப்
இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஒற்றையர், இரட்டையர் சாம்பியன் பட்டங்களை வென்ற வீரங்கனை என்ற பெருமை கிரெஜ்சிகோவாக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 2000ஆம் ஆண்டு பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த மேரி பிரைச் தான் இந்த டபுல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யூரோ 2020: பின்லாந்து, பெல்ஜியம் அசத்தல் வெற்றி; டிராவில் முடிந்த வேல்ஸ் vs சிவிஸ் ஆட்டம்