கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி மூன்றாமிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 9ஆம் தேதி முதல் அந்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டிலேயே இருந்து பொழுதைக் கழித்து வந்த இளம்பெண்கள் இருவர், தற்போது டென்னிஸ் விளையாடுவதற்காக புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, இருவரும் அவரவர் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று டென்னிஸ் விளையாடியுள்ளனர். இதன் காணொலி இணையத்தில் வைரலானது. மேலும் டென்னிஸ் நட்சத்திரம் சிட்சிபாஸ், கூடைப்பந்து நட்சத்திரம் ரெக்ஸ் சாப்மன், பியர்ஸ் மோர்கன் உள்ளிட்டோர் இந்த காணொலியை தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:‘சிவாஜி தி பாஸ்’ புதிய லுக்கில் அசத்தும் கபில்தேவ்!