2021ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 5ஆம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை (Stefanos Tsitsipas) எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் முதல் இரண்டு செட்களை 6-3, 6-2 என்று எளிதாக கைப்பற்றிய நடால் நேர் செட்களில் வெற்றிபெறும் வேகத்தில் மூன்றாம் செட்டையும் விளையாடினார்.
மூன்றாம் செட்டிலிருந்து நாடலுக்கு கடும் போட்டியை தரத்தொடங்கிய சிட்சிபாஸ், மூன்றாவது செட்டை டை பிரேக்கருக்கு கொண்டுச் சென்றார். டை பிரேக்கிரல் அபராமாக ஆடி மூன்று செட்டை வென்ற சிட்சிபாஸ், நான்காவது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றி நாடலுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இருவரும் தல இரண்டு செட்களை கைப்பற்றிய நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தின் ஐந்தாவது செட்டிலும் ஆட்டம் அனல் பறந்தது. ஐந்தாவது செட் ஆட்டம் 5-5 என சம பலத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், அடுத்து நடால் செர்வ் செய்த கேமை வென்று 6-5 என முன்னிலை பெற்றார் சிட்சிபாஸ்.
இறுதியாக ஐந்தாவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்தார் சிட்சிபாஸ்.
முதல் இரண்டு செட்களை கைப்பற்றிய பின்னரும் சிட்சிபாஸின் சவாலான ஆட்டத்தின் காரணமாக சுமார் நான்கரை மணி நேரம் போராடி தோல்வியடைந்தார் முன்னணி வீரர் ரபேல் நடால்.
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பட்டியில் தல 20 வெற்றிகளுடன் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் சமமான நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் தொடரை வென்று 21ஆவது கிராண்ட்ஸ்லாமுடன் முதல் இடத்திற்கு முன்னேறலாம் என்ற நடால் கனவை இன்றைய வெற்றியின் மூலம் சிட்சிபாஸ் தகர்த்துவிட்டார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: அரையிறுதிச்சுற்றில் மெத்வதேவ்!