2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்துவருகிறது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனி நடியா கிச்னோக் ஆகியோர் ஆடினர்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு டென்னிஸுக்குத் திரும்பிய சானியா, முதல் தொடரிலேயே (ஹோபர்ட் ஓபன்) பட்டத்தைக் கைப்பற்றியதால், ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலும் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே காலில் காயம் ஏற்பட்டதால் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் மகளிர் இரட்டையர் பிரிவில் கலந்துகொள்வேன் என சானியா அறிவித்திருந்தார்.
இன்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை சீனாவின் ஸின்யுன் ஹான் - லிங் ஹூ இணையை எதிர்த்து ஆடியது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் சீன இணை கைப்பற்றியது. பின்னர் நடந்த இரண்டாம் செட்டில் 1-0 என்றிருந்தபோது, காயம் காரணமாக ஆட்டத்தை தொடர முடியாத நிலை சானியாவுக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டத்திலிருந்து விலகுவதாக சானியா மிர்சா அறிவித்தார்.
இதனால் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து சானியா மிர்சா - நடியா கிச்னோவிக் இணை வெளியேறியது. சானியா இணை விலகியதால், சீனாவின் ஸின்யுன் ஹான் - லிங் ஹூ இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: தான் ஆடவேண்டிய டென்னிஸ் இன்னும் அதிகமுள்ளது - சானியா மிர்சா