உலகம் முழுவதும் கரோனா வைரஸின் அச்சுறுத்தலால் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், டென்னிஸ் விளையாட்டில் முக்கிய தொடராக கருதப்படும் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இந்தாண்டு மே மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா தாக்கம் காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, டென்னிஸ் தொடர்களின் தேதி மாற்றம் குறித்து தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘பிரஞ்சு ஓபன் ஒத்திவைக்கப்பட்டது குறித்து நிச்சயமாக வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது எனக்கு டென்னிஸ் கூட்டமைப்பிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. மின்னஞ்சலை பார்த்ததும் நான் ஓரிரு வீரர்களுடன் பேசினேன், ஆனால் அவர்கள் மிகவும் எரிச்சலடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதேசமயம் பிரஞ்சு ஓபன் தொடர் அட்டவணையில் எவ்வாறு பொருந்தப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் அமெரிக்க ஓபன் போன்ற கடினமான மைதானத்தில் விளையாடியதும், ஒருவாரத்திற்குள் நாங்கள் எப்படி திடீரென்று ஒரு களிமண் மைதானத்தில் விளையாடப் போகிறோம் என எனக்கு தெரியவில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Joint WTA/ @atptour Announcement:
— WTA (@WTA) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
All ATP and WTA tournaments in the Spring clay court swing will not be held as scheduled.
The professional tennis season is now suspended through June 7, 2020 --> https://t.co/IYR6A2pI05 pic.twitter.com/qHOlmohWbq
">Joint WTA/ @atptour Announcement:
— WTA (@WTA) March 18, 2020
All ATP and WTA tournaments in the Spring clay court swing will not be held as scheduled.
The professional tennis season is now suspended through June 7, 2020 --> https://t.co/IYR6A2pI05 pic.twitter.com/qHOlmohWbqJoint WTA/ @atptour Announcement:
— WTA (@WTA) March 18, 2020
All ATP and WTA tournaments in the Spring clay court swing will not be held as scheduled.
The professional tennis season is now suspended through June 7, 2020 --> https://t.co/IYR6A2pI05 pic.twitter.com/qHOlmohWbq
நான் சனிக்கிழமை ஃபெட் கோப்பை தொடரை முடித்தவுடன் எனது தந்தையுடன் சேர்ந்து இந்தியன் வெல்ஸ் தொடருக்காக கலிஃபோர்னியா வந்துசேர்ந்தேன். அங்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அத்தொடர் ரத்துசெய்யப்பட்டதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது. அப்போது எனது 20 மணி நேர பயணம் உபயோகமில்லாமல் போனது’ என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:செப். மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட பிரெஞ்சு ஓபன்!