ETV Bharat / sports

துபாய் ஓபன்: காலிறுதி வாய்ப்பைத் தவறவிட்ட சானியா இணை! - மகளிர் இரட்டையர் பிரிவு

துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா - கரோலின் கார்சியா இணை அதிர்ச்சி தோல்வியடைந்தது.

Sania loses in women's doubles 2nd round in Dubai

author img

By

Published : Feb 20, 2020, 7:59 AM IST

துபாயில் நடைபெற்றுவரும் துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, பிரான்சின் கரோலின் கார்சியா இணை, சீனாவின் சைசாய் ஜெங்(Saisai Zheng) - செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா(Barbora Krejcikova) இணையை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சைசாய் இணை முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி சானியா இணைக்கு அதிர்ச்சியளித்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சைசாய் இணை, அந்த செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதன் மூலம் சானியா - கார்சியா இணை 2-6, 4-6 என்ற நேர் செட்கணக்கில் சைசாய் - பார்போரா இணையிடம் தோல்வியைத் தழுவி, துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறியது.

இதையும் படிங்க: எட்டு ஆண்டுகளுக்குப் பின் கம்பேக் கொடுத்த முன்னாள் கிராண்ட்ஸ்லாம் வீராங்கனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.