மகளிருக்கான ஹோபர்ட் இன்டர்நேஷன்ல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நடியா கிச்னோக் இணை பங்கேற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை காலிறுதிப் போட்டிவரை முன்னேறியது.
இதனிடையே இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சானியா மிர்சா - நடியா கிச்னோக் இணை அமெரிக்காவின் வானியா கிங் - கிறிஸ்டினா மெக்காலே ஜோடியை எதிர்த்து விளையாடியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என சானியா இணையும், இரண்டாவது செட்டை 6-3 என அமெரிக்க இணையும் கைப்பற்றின.
இதனால் 1-1 என்ற கணக்கில் போட்டி சமநிலை வகிக்க வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி மற்றும் மூன்றாவது செட்டில் சானியா - கிச்னோக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10-4 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி வெற்றியைப் பதிவு செய்தனர். இதன்மூலம் அவர்கள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அரையிறுதியில் சானியா - கிச்னோக் இணை, ஸ்லோவேனியன் - செக் குடியரசு ஜோடியான தமாரா ஸிடான்செக், மேரி போஸ்கோவா ஆகியோரை எதிர்த்து விளையாடுகிறது.
தற்போது 33 வயதான சானியா மிர்சா இரண்டு ஆண்டுகள் கழித்து சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்த இவர், அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பின் டென்னிஸ் போட்டிகளுக்குத் திரும்பியுள்ளார்.
-
The return run continues for @MirzaSania as she and Nadiia Kichenok are through to the @hobarttennis doubles semifinals.
— WTA (@WTA) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
They defeat McHale/King 6-2, 4-6, 10-4 pic.twitter.com/zXkhenBmbJ
">The return run continues for @MirzaSania as she and Nadiia Kichenok are through to the @hobarttennis doubles semifinals.
— WTA (@WTA) January 16, 2020
They defeat McHale/King 6-2, 4-6, 10-4 pic.twitter.com/zXkhenBmbJThe return run continues for @MirzaSania as she and Nadiia Kichenok are through to the @hobarttennis doubles semifinals.
— WTA (@WTA) January 16, 2020
They defeat McHale/King 6-2, 4-6, 10-4 pic.twitter.com/zXkhenBmbJ
சானியா மிர்சா, திரும்பிய முதல் தொடரிலியே அரையிறுதி வரை முன்னேறியிருப்பது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் அவர் இந்தத் தொடரில் நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த இரு போட்டிகள் பட்டாஸாக இருக்கப்போகிறது : கங்குலி நம்பிக்கை!