உள்ளரங்கு விளையாட்டுத் தொடரான வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் நட்சத்திர வீரர் அண்ட்ரே ரூபெலேவ், இத்தாலியின் லோரென்சோ சோனெகோவை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டின் முதல் செட்டை ரூபெலேவ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூபெலேவ் 6-4 என்ற கணக்கில் அதனையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றில் ஆண்ட்ரே ரூபெலேவ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியில் லோரென்சோ சோனெகோவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
-
Can't. Stop. Winning. 🏆
— ATP Tour (@atptour) November 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇷🇺 @AndreyRublev97 wins an ATP Tour-best fifth title in 2020 at the @ErsteBankOpen, defeating Sonego 6-4, 6-4! pic.twitter.com/5hzp0h3Grh
">Can't. Stop. Winning. 🏆
— ATP Tour (@atptour) November 1, 2020
🇷🇺 @AndreyRublev97 wins an ATP Tour-best fifth title in 2020 at the @ErsteBankOpen, defeating Sonego 6-4, 6-4! pic.twitter.com/5hzp0h3GrhCan't. Stop. Winning. 🏆
— ATP Tour (@atptour) November 1, 2020
🇷🇺 @AndreyRublev97 wins an ATP Tour-best fifth title in 2020 at the @ErsteBankOpen, defeating Sonego 6-4, 6-4! pic.twitter.com/5hzp0h3Grh
இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ரூபெலேவ்விற்கு பரிசுத் தொகையாக ரூ.1 கோடியும், லோரென்சோவிற்கு ரூ.75 லட்சமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:மீண்டும் அசத்திய கெய்க்வாட்; பாஞ்சாப்பின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது சிஎஸ்கே!