யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சுவிஸ் நாட்டின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் இந்தியாவின் சுமிட் நகலுடன் மோதினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஃபெடரரை நகல் வீழ்த்தினார். அதன்பின் தனது சுதாரித்துக்கொண்ட ஃபெடரர் இரண்டாவது செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் நகலை அதிரடியாக சாய்த்தார்.
-
4-6, 6-1, 6-2, 6-4@rogerfederer gets his 40th win of the year after rallying to defeat spirited qualifier Sumit Nagal!#USOpen pic.twitter.com/3LBjNp0hrn
— US Open Tennis (@usopen) August 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">4-6, 6-1, 6-2, 6-4@rogerfederer gets his 40th win of the year after rallying to defeat spirited qualifier Sumit Nagal!#USOpen pic.twitter.com/3LBjNp0hrn
— US Open Tennis (@usopen) August 27, 20194-6, 6-1, 6-2, 6-4@rogerfederer gets his 40th win of the year after rallying to defeat spirited qualifier Sumit Nagal!#USOpen pic.twitter.com/3LBjNp0hrn
— US Open Tennis (@usopen) August 27, 2019
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபெடரர் அடுத்தடுத்து இரண்டு செட்களையும் 6-2, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் நகலை வீழ்த்தினார்.
இதன் மூலம் ரோஜர் ஃபெடரர் 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட்கணக்கில் இந்தியாவின் சுமிட் நகலை வீழ்த்தி யூஎஸ் ஓபன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான சுமிட் நகல், தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஃபெடரருக்கே கடும்சவாலைத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ட்விட்டரில் யூஎஸ்ஓபன், ரோஜர் ஃபெடரர், சுமிட் நகல் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்கள் உலக அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.