ETV Bharat / sports

புதிய உச்சத்தை தொட்ட ஆஸ்திரேலிய ஓபன்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்  பரிசுத் தொகையை 33 சதவிகிதம் உயர்த்தி ஆஸ்திரேலிய டென்னிஸ் அமைப்பு  அறிவித்துள்ளது.

Australian Open 2020
Australian Open 2020
author img

By

Published : Dec 24, 2019, 6:20 PM IST

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பாக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டுவருகிறது. அடுத்த ஆண்டிற்கான இத்தொடரானது ஜனவரி 20ஆம் தேதி மெல்போர்னின் பார்கில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பானது வீரர்களை ஊக்கமளிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 33 சதவிகிதம் உயர்த்தி இத்தொடரை அடுத்த ஆண்டு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இயக்குநர் கிரேக் டைலி கூறுகையில், "2010ஆம் ஆண்டு இத்தொடரில் வெற்றிபெற்ற ஆடவர், மகளிர் பிரிவு வெற்றியாளர்களின் பரிசுத் தொகை 4.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக இருந்தது. இதனை தற்போது 25 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக மாற்றியமைத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், 2010ஆம் ஆண்டு முதல் இத்தொடரின் வருவாயானது 189.9 சதவிகிதமாக அதாவது 71 மில்லியன் உயர்ந்ததையடுத்து இந்த முடிவினை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதேபோல் இத்தொடரின் முதல் சுற்றில் வெளியேறுபவர்களுக்கு 20,000 ஆஸ்திரேலிய டாலர்களையும், முக்கிய ஆட்டங்களில் வெளியேறுவோருக்கு 90,000 ஆஸ்திரேலிய டாலர்களையும் பரிசுத் தொகையை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏப்ரல்வரை அவரால் அணிக்குத் திரும்ப இயலாது: சொல்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/tennis/record-aud-71-million-in-prize-money-for-australian-open-2020/na20191224113646695

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.