மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ நகரில் நடப்பு ஆண்டுக்கான மெக்சிகன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால், அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், நடால் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தனது மூன்றாவது மெக்சிகன் ஓபன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். (2005, 2013, 2020)
-
There it is 🙌
— ATP Tour (@atptour) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
A 🏆 & 🤠 for @RafaelNadal. #AMT2020
🎥: @TennisTV pic.twitter.com/UFuhwgjVFH
">There it is 🙌
— ATP Tour (@atptour) March 1, 2020
A 🏆 & 🤠 for @RafaelNadal. #AMT2020
🎥: @TennisTV pic.twitter.com/UFuhwgjVFHThere it is 🙌
— ATP Tour (@atptour) March 1, 2020
A 🏆 & 🤠 for @RafaelNadal. #AMT2020
🎥: @TennisTV pic.twitter.com/UFuhwgjVFH
ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவர் வெல்லும் 85ஆவது ஏடிபி பட்டம் இதுவாகும். 33 வயதான நடால் இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டென்னிஸ்க்கு 'குட்பை' சொன்ன மரியா ஷரபோவா!