2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் தொடங்கி நடந்துவருகின்றன. இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - லாட்வியாவின் ஜெலனா இணையை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் சாண்டர்ஸ் - போல்மன்ஸ் இணை ஆடியது.
-
Ostapenko / Paes through. #AusOpen pic.twitter.com/k2HDPFIw96
— Ashish 🎾🎥 (@tennis_gifs) January 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ostapenko / Paes through. #AusOpen pic.twitter.com/k2HDPFIw96
— Ashish 🎾🎥 (@tennis_gifs) January 26, 2020Ostapenko / Paes through. #AusOpen pic.twitter.com/k2HDPFIw96
— Ashish 🎾🎥 (@tennis_gifs) January 26, 2020
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஆஸ்திரேலிய இணை 7-6 எனக் கைப்பற்ற, அடுத்த செட்டில் பயஸ் இணை தங்களது திறமையை வெளிப்படுத்தியது. இரண்டாவது செட்டை 6-3 என பயஸ் இணை கைப்பற்றியதோடு மூன்றாவது செட்டையும் 10-6 எனக் கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றுக்கு லியாண்டர் பயஸ் - ஜெலனா இணை முன்னேறியுள்ளது.
இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா - உக்ரைனின் கிச்னோவிக் இணையை எதிர்த்து அமெரிக்காவின் நிகோல் மெலிச்சர் - பிரேசிலின் ப்ரூனோ இணை ஆடியது. இந்த ஆட்டத்தில் 6-4, 7-6 (4) என்ற செட் கணக்கில் போபண்ணா இணை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோலியின் மேஜிக்!