ETV Bharat / sports

#ChinaOpen: பரபரப்பான ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் தீம்!

author img

By

Published : Oct 6, 2019, 9:57 PM IST

பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் டோமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.

#ChinaOpen

சீன ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரரான டோமினிக் தீம், கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் முதல் செட் கணக்கை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி தீம்மிற்கு அதிர்ச்சியளித்தார். அதன்பின் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோமினிக் தீம், இரண்டாவது செட் கணக்கை 6-4 என்ற புள்ளிகணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பைக் கூட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஆட்டத்தில் அதிரடி காட்டிய டோமினிக் தீம், மூன்றாவது செட் கணக்கை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி சிட்சிபாஸை திணறடித்தார்.

இதன்மூலம் ஆஸ்திரியாவின் டோமினிக் தீம், சீன ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 3-6, 6-4, 6-1 என்ற கணக்குகளில் கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார்.

இதையும் படிங்க: #LaLiga2019: கோல் கணக்கைத் தொடங்கிய ரூ.786 கோடிக்கு ஒப்பந்தமான ஹசார்டு!

Intro:Body:

China open tennis men's final

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.