சர்வதேச டென்னிஸ் விளையாட்டு தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய இவர், நடப்பு ஆண்டிற்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க தயாராகிவந்திருந்தார்.
இந்நிலையில், மியாமியில் விதிக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் காரணமாக நடப்பாண்டிற்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக ஜோகோவிச் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்த ஜோகோவிச்சின் ட்விட்டர் பதிவில், "நடப்பாண்டு மியாமி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதை அறிவிப்பதற்கு மிகவும் வருந்துகிறேன். இந்த விலைமதிப்பற்ற நேரத்தை என் குடும்பத்தினருடன் செலவிட முடிவுசெய்துள்ளேன். அதேசமயம் அடுத்த ஆண்டு மீண்டும் வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக முன்னணி டென்னிஸ் வீரர்களான ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோரும் இதே காரணங்களால் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனியின் சாதனையைச் சமன்செய்த ஆஸ்கர் ஆஃப்கான்!