ETV Bharat / sports

ஏடிபி பைனல்ஸ்: பெரெட்டினியை வீழ்த்தினார் ஜோகோவிச்!

author img

By

Published : Nov 10, 2019, 10:43 PM IST

லண்டன்: ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரரான நோவாக் ஜோகோவிச் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் பெரெட்டினியை வீழ்த்தினார்.

ATP masters finals

உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களுக்கான டென்னிஸ் தொடரான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டன் நகரில் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச், இத்தாலியின் பெரெட்டினியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் முதல் செட் கணக்கை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி பெரெட்டினிக்கு அதிர்ச்சியளித்தார்.

அதன் பின் நடைபெற்ற இரண்டாவது செட்டுக்கான ஆட்டத்திலும் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் இரண்டாவது செட்டையும் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் நட்சத்திர டென்னிஸ் வீரரான ஜோகோவிச் 6-2, 6-1 என்ற நேர் செட்கணக்குகளில் இத்தாலியின் பெரெட்டினியை வீழ்த்தி ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.

உலகின் முன்னணி நட்சத்திர டென்னிஸ் வீரரான ஜோகோவிச், கடந்த வாரம் நடைபெற்ற பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்! #RolexParisMasters

Intro:Body:

ATP masters finals

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.