ETV Bharat / sports

200 பட்டங்களை வெல்லும் எண்ணம் இல்லை - பெடரர்

டென்னிஸ் போட்டிகளில் நூறு ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றியதே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் 200 பட்டங்கள் வெல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

ரோஜர் பெடரர்
author img

By

Published : Mar 21, 2019, 11:26 PM IST

சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். உலகின் ஐந்தாம் நிலை வீரராக இருக்கும் பெடரர், மொத்தமாக 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஒரே ஆடவர் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். ஆஸ்திரேலியன் ஓபன், பிரஞ்ச் ஓபன், விம்பிள்டென், அமெரிக்கன் ஓபன் என உலகின் பெரிய டென்னிஸ் தொடர்களிலும் இவர் கோப்பையை வென்றுள்ளார்.

37 வயதான பெடரர் சமீபத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஸிப் தொடரின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம், டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் 100 ஏடிபி பட்டங்களை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். முன்னதாக அந்த சாதனையை அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜிம்மி கானோர்ஸ் (109 பட்டங்கள்) படைத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பிஎன்பி பாரிபாஸ் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற பெடரர், அந்த தொடரில் ஒன்பதாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஆனால் அவர் அப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீமிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்நிலையில், ரோஜர் பெடரர் அடுத்ததாக மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளார். 18வது முறையாக மியாமி ஓபனில் களமிறங்கும் பெடரர் கூறியதாவது,

இந்தியன் வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது தனக்கு வருத்தமளிக்கவில்லை. துபாய் மற்றும் இந்தியன் வெல்ஸ் தொடர்களின் இறுதிப்போட்டியில் எடுத்த புள்ளிகள் தனக்கு மகிழ்ச்சியளித்தது என்று கூறினார். மேலும், தனக்கு 200 பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தான் 100 பட்டங்களை பெற்றதையே போதுமானதாக கருதுவதாக அவர் கூறினார்.

Intro:Body:

https://www.aninews.in/news/sports/tennis/not-another-100-federer-clarifies-his-career-title-goal20190321192047/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.