மெல்போர்னில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று(பிப்.9) நடைபெற்றன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நகல், லிதுவேனியாவின் ரிசார்டாஸ் பெரான்கிஸ்-ஐ எதிர்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இப்போட்டியில் ரிசார்டாஸ் பெரான்கிஸ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் முதல் இரண்டு செட்களையும் கைப்பற்றி, நகலிற்கு அதிர்ச்சியளித்தார்.
தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆம் செட் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய பெரான்கிஸ் 6-3 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம் ரிசார்டாஸ் பெரான்கிஸ் 6-2, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் சுமித் நகலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இத்தோல்வியின் மூலம் இந்தியாவின் சுமித் நகல், ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தோடு வெளியேறினார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன் : இரண்டாவது சுற்றில் நடால்!