யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரஃபேல் நடால் 6-4 என்ற செட் கணக்கில் டியாகோவிடமிருந்து கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து 7-5 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் தன்வசமாக்கினார்.
-
Rafa Roar 🔟/🔟@RafaelNadal improves to 8-1 in #USOpen quarterfinals. pic.twitter.com/Bd1P5Cv9Ff
— US Open Tennis (@usopen) September 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rafa Roar 🔟/🔟@RafaelNadal improves to 8-1 in #USOpen quarterfinals. pic.twitter.com/Bd1P5Cv9Ff
— US Open Tennis (@usopen) September 5, 2019Rafa Roar 🔟/🔟@RafaelNadal improves to 8-1 in #USOpen quarterfinals. pic.twitter.com/Bd1P5Cv9Ff
— US Open Tennis (@usopen) September 5, 2019
அதன்பின் ரஃபேல் நடால் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மூன்றாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் டியாகோவை வீழ்த்தினார். இதன்மூலம் ரஃபேல் நடால் 6-4, 7-5, 6-2 எனற செட் கணக்குகளில் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் உலகின் முன்னணி நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார். அரையிறுதியில் இவர் இத்தாலியின் மேட்டோ பிரிட்டினியை (Matto Brittieni) எதிர்கொள்கிறார்.