ETV Bharat / sports

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய நடால்! - அர்ஜெண்டினாவின் குய்டோ பேலா

மொனாக்கோ : மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் தொடர் டென்னிஸ் போட்டியில் அர்ஜெண்டினாவின் குய்டோ பேலாவை வீழ்த்திய ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.

பேலா
author img

By

Published : Apr 20, 2019, 12:09 PM IST

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸின் மொனாக்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் நடாலை எதிர்த்து அர்ஜெண்டினாவின் குய்டோ பேலா மோதினார்.

இதன் முதல் செட்டின் தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய பேலா, நடாலைத் தனது சிறப்பான ஆட்டத்தால் திணறடித்தார். விறுவிறுவென பேலா 4-1 என முன்னிலை பெற, ஆட்டம் பரபரப்பானது. இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட நடால் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட் ஆட்டத்தை இருவரும் சரிசமமாக ஆட, ஆட்டம் டை - ப்ரேக்கர் வரை சென்றது. கடைசியில் முதல் செட்டை 7-6 என நடால் கைப்பற்றினார்.

நடால் - பேலா ஆடிய போட்டி

பின்னர் தொடங்கிய இரண்டாவது செட் ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-3 எனக் கைப்பற்றி, இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.

2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.

நடால்
நடால்

இன்று இரவு நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் ரஃபேல் நடாலை எதிர்த்து இத்தாலி வீரர் ஃபேபியோ ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.