2019ஆம் ஆண்டுக்கான மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் நடாலை எதிர்த்து சகநாட்டு வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகுட் விளையாடினார்.
களி மண் மைதானங்களின் மன்னன் என அழைக்கப்படும் நடால் இந்த போட்டியின் தொடக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது அதிரடிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பாடிஸ்டா திணறினார். இதனையடுத்து நடால் முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இதனையடுத்து நடந்த இரண்டாவது செட்டையும் 6-1 என நடால் எனக் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் அரையிறுதி போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய நடால், பின்னர் இந்த தொடரில் களமிறங்கியுள்ளார். ஃபிரன்ச் ஓபன் தொடருக்கு முன்னதாக நடைபெறும் தொடர் என்பதால் இது ரசிகர்களிடையே கூடுதல் கவனம் பெற்றுள்ளது.