கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகின் அனைத்து விதமான விளையாட்டுப்போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் டென்னிஸ் விளையாட்டின் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போன்ற மிக முக்கிய தொடர்களும் அடங்கும். அந்த வரிசையில் தற்போது ஐரோப்பிய அணி - உலக அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த லேவர் கோப்பைத் தொடரின் நான்காவது சீசனும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லேவர் கோப்பை டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் போஸ்டனில் நடைபெறுவதாக இருந்த லேவர் கோப்பை டென்னிஸ் தொடர், உலக டென்னிஸ் அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 2021ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட அட்டவணை மாற்றம் காரணமாக அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் போஸ்டன் நகரிலுள்ள டீடி கார்டனில் லேவர் கோப்பைத் தொடரின் நான்காவது சீசன் நடைபெறும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Laver Cup Boston 2020 moved to 2021. Will be held September 24-26, 2021 @tdgarden. Read the full media release on https://t.co/NXSOiFKDXQ. pic.twitter.com/AcIvnRk67S
— Laver Cup (@LaverCup) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Laver Cup Boston 2020 moved to 2021. Will be held September 24-26, 2021 @tdgarden. Read the full media release on https://t.co/NXSOiFKDXQ. pic.twitter.com/AcIvnRk67S
— Laver Cup (@LaverCup) April 17, 2020Laver Cup Boston 2020 moved to 2021. Will be held September 24-26, 2021 @tdgarden. Read the full media release on https://t.co/NXSOiFKDXQ. pic.twitter.com/AcIvnRk67S
— Laver Cup (@LaverCup) April 17, 2020
இதுகுறித்து ரோஜர் ஃபெடரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்படுவது மிகவும் வருத்துமளிக்கிறது. இருப்பினும் இந்த சுழ்நிலையில் இதுவே சரியான தீர்வு என நினைக்கிறேன். மேலும் அனைவரது பாதுகாப்பு குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரத்தாகும் விம்பிள்டன் தொடர்!