இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம். எனக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை என் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடன் தொடர்பிலிருந்து அனைவரும் தங்களைப் பரிசோதித்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என கூறியிருந்தார்.
மேலும், “நான் எதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் வீடு திரும்பிவிட்டேன். குணமடைந்து வருகிறேன். உங்களது ஆதரவுக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இது அவர் ரசிகர்கள், டென்னிஸ் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச் சார்பில் குரோஷியாவில் நடந்து வரும் ஆட்ரியா டென்னிஸ் தொடரில், கிரிகோர் டிமிட்ரோவ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'தவறான அவுட் கொடுத்ததால் தூக்கமே வரவில்லை' - சச்சின் அவுட் குறித்து முன்னாள் நடுவர்