பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கிரீஸ் நாட்டின் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் (Stefanos Tsitsipas), உலகின் நம்பர் ஒன் தரவரிசை வீரர் நோவக் ஜோகோவிக் (செர்பியன்) ஆகியோர் மோதினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியை ருசித்தார்.
இதன்மூலம் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இரு முறை வென்றவர் என்ற சாதனையையும் படைத்தார். அதுமட்டுமல்லாமல், நோவக் ஜோகோவிச் இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோரை நெருங்கியுள்ளார்.
ரோஜரும், நடாலும் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளனர். மேலும், டென்னிஸ் ஓபன் (1968) சகாப்த வரலாற்றில் (கிட்டத்தட்ட 52 ஆண்டுகள்) இரு கிராண்ஸ்ட்லாம் வென்ற முதல் ஆடவர் நோவக் ஜோகோவிச் ஆவார். அதேபோல் ராட் லாவருக்கு ( Rod Laver) பிறகு நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இருமுறை வென்றவர் என்ற சாதனையையும் படைத்தார்.
அந்த வகையில் ஒட்டுமொத்த பார்க்கையில் ஜோகோவிச் மூன்றாவது டென்னிஸ் வீரர் ஆவார். இந்தச் சாதனையை ஜோகோவிச்க்கு முன்னதாக ராட் லாவர் மற்றும் ராய் எமெர்சன் படைத்துள்ளனர்.
நோவக் ஜோகோவிச் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒன்பது முறையும், விம்பிள்டன் கோப்பையை ஐந்து முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை மூன்று முறையும் வென்றுள்ளார். ஜோகோவிச் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றவுடன் தன் கையில் வைத்திருந்த ராக்கெட்டை (பேட்) பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனிடம் வழங்கினார்.
-
Novak Djokovic gifted away his racket to a young fan after winning the French Open.
— Sporting News (@sportingnews) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
His reaction was priceless. pic.twitter.com/HIFq9luRYN
">Novak Djokovic gifted away his racket to a young fan after winning the French Open.
— Sporting News (@sportingnews) June 13, 2021
His reaction was priceless. pic.twitter.com/HIFq9luRYNNovak Djokovic gifted away his racket to a young fan after winning the French Open.
— Sporting News (@sportingnews) June 13, 2021
His reaction was priceless. pic.twitter.com/HIFq9luRYN
அதைப் பெற்றுக்கொண்ட சிறுவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெருமகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். பார்க்க பார்க்க திகட்டாத அழகிய தருணம் அது.
இதையும் படிங்க: பிரெஞ்ச் ஓபன் 2021: டபுள் சாம்பியன் பட்டம் வென்று கிரெஜ்சிகோவா சாதனை