கொல்கத்தா: டேவிஸ் கோப்பை பயிற்சியாளரும், இந்திய டென்னிஸில் புகழ்பெற்ற நபருமான அக்தர் அலி புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 81.
இவர் இந்தியாவின் தற்போதைய டேவிஸ் கோப்பை பயிற்சியாளர் ஜீஷன் அலியின் தந்தை. இவர், லியாண்டர் பயஸ், சோம்தேவ் தேவ்வர்மன், விஜய் அமிர்தாஜ், ஆனந்த் அமிர்தராஜ், ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட டென்னிஸ் வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், கொல்கத்தாவில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இவரது மறைவிற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்தார். அரசு சார்பில் மரியாதை செலுத்துவதற்காக மாநில அமைச்சர் அருப் பிஸ்வாஸ் அக்தர் அலியின் வீட்டிற்கு சென்றார்.